தன்னம்பிக்கை, மன உறுதி இருந்தால் வாய்ப்புக்களை உருவாக்க முடியும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தேனி தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது மாணவர்கள் இடையே அவர் கலந்துரையாடினார். விழாவில் பேசிய ஆளுநர், தன்னம்பிக்கை, மன உறுதி மற்றும் சுய ஒழுக்கம் இருந்தால், வாய்ப்புகளை உருவாக்க முடியும் என தெரிவித்தார்.
பெரிதாகக் கனவு காணுங்கள், கடினமாக உழைத்து, அதைச் செய்ய உங்கள் நேரத்தை நியாயமாகப் பயன்படுத்துங்கள். எதுவும் உங்கள் கைக்கு எட்டும் தூரம் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பின்னர் தேனி சென்டெக்ட் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். தமிழகத்திலேயே பின் தங்கிய மாவட்டமாக தேனி உள்ளது. விவசாயத்தில் இருந்து நாட்டிற்கான பங்கீடு என்பது குறைவாகவே உள்ளது. தனிநபர் வருவாயை அதிகரிக்கச் செய்தால் தமிழகத்தில் ஏழ்மை நிலையை நீக்கலாம் என்று ஆளுநர் கூறினார்.