நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி,தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகள் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், அசாமில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 3 வேட்பாளர்களின் பெயர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. கவுகாத்தியில் பாபென் சவுத்ரி, தில்பர்காவில் மனோஜ் தன்வார் மற்றும் சோனிபூரில் ரிஷி ராஜ் போட்டியிடுகின்றனர். ”
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அசாம் மாநிலத்தில் இருந்து 3 வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். இந்த மூன்று தொகுதிகளிலும் முழு பலத்துடன் தேர்தல் பணிகளை தொடங்குவோம். இண்டி கூட்டணியுடன் பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் பேசுவதில் சோர்வடைகிறோம். எங்களுக்கு நேரமில்லை. எனவே வேட்பாளர்களை அறிவித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.