19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இரண்டாவது அணியாக ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தத் தொடரின் சூப்பர் 6 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தற்போது அரையிறுதிப் போட்டிகளும் முடிவடைந்துவிட்டது.
இதன் இரண்டாவது அரையிறுதி போட்டி சஹாரா பார்க் மைதானத்தில் நேற்று நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடியன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 48வது ஓவர் முடிய அனைத்து விக்கெட்களையும் இழந்து 179 ரன்களை எடுத்தது.
இதில் அதிகபட்சமாக அசான் அவாய்ஸ் மற்றும் அராபத் மின்ஹாஸ் ஆகியோர் தலா 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து அதிகபட்சமாக ஷாமில் ஹுசைன் 17 ரன்களை எடுத்தார். பாக்கிஸ்தான் அணியில் மற்ற வீரர்கள் ஓரிலக்க எண்ணில் ஆட்டமிழந்தனர்.
இதனால் பாகிஸ்தான் அணி 48வது ஓவர் முடிய அனைத்து விக்கெட்களையும் இழந்து 179 ரன்களை எடுத்தது.
ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக டாம் 6 விக்கெட்களை வீழ்த்தினார். மஹ்லி, விட்லெர், மேக்மில்லன், எட்வர்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி கடைசி ஓவரில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரராக ஹாரி டிக்சன் 50 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஒல்லி பீக் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
டாம் 25 ரன்களும், சாம் 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, மேக்மில்லன் 19 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் ஆஸ்திரேலியா அணி கடைசி ஓவரில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்து திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
வரும் 11 ஆம் தேதி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடவுள்ளன.