டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கியதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
புகழ்பெற்ற டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்துள்ளது, முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்ட மகத்தான மனிதர்கள் மீது நமது தேசம் வைத்திருக்கும் நன்றி உணர்வுக்கு ஒரு சான்றாகும்.
புகழ்பெற்ற டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்துள்ளது, முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்ட மகத்தான மனிதர்கள் மீது நமது தேசம் வைத்திருக்கும் நன்றி உணர்வுக்கு ஒரு சான்றாகும்.
நமது தேசத்தின் உணவு நெருக்கடி காலத்தை, உணவுப் பாதுகாப்பு காலமாக… pic.twitter.com/JgXIjb4KeC
— Amit Shah (@AmitShah) February 9, 2024
நமது தேசத்தின் உணவு நெருக்கடி காலத்தை, உணவுப் பாதுகாப்பு காலமாக மாற்றக்கூடிய கடினமான பணியை தனது அறிவியல் திறமையால் நிறைவேற்றிய ஒரு அரிய மேதையாக சுவாமிநாதன் அவர்களை நமது வரலாறு நினைவு கூர்கிறது.
சிறந்த கல்வியாளரான சுவாமிநாதன் அவர்களின் தேடல்கள் அற்புதமான ஆராய்ச்சிப் பணிகளுக்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், பாரம்பரியத்தைத் தொடர ஏராளமான அறிவார்ந்தவர்களை மற்றும் திறமையானவர்களை உருவாக்கியது.
இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில், உயரிய பாரத ரத்னா விருதால் அலங்கரிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.