நீதிமன்றத்தில் ஆஜரான மு.க.அழகிரி!
Aug 19, 2026, 03:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜரான மு.க.அழகிரி!

Murugesan M by Murugesan M
Feb 9, 2024, 03:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேர்தல் அதிகாரியை தாக்கிய வழக்கில், தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, இன்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழகத்தில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றது. அப்போது, மதுரை மாவட்டம், மேலூர் அருகே வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாகப் புகார் எழுந்தது.

இதனால், மேலூர் தேர்தல் அதிகாரியும், வட்டாட்சியருமான காளிமுத்து, வீடியோ கிராபருடன் அங்கு சென்று வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் காட்சியை வீடியோ பதிவு செய்தார்.

இதற்கு தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் மு.கஅழகிரி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், மு.க.அழகிரியுடன் இருந்தவர்கள் மேலூர் தேர்தல் அதிகாரியும், வட்டாட்சியருமான காளிமுத்துவை அடித்து உதைத்தனர். இது குறித்து, வட்டாட்சியர் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், தி.மு.க முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி, அப்போதைய மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் நேரில் ஆஜரானார்கள்.

Tags: Madurai high courtM. K. Alagiri appeared in the court!
Share
Tweet
SendShare
Previous Post

டாக்டர் எம்.எஸ் சுவாமிநாதனை நமது வரலாறு நினைவு கூர்கிறது! – அமித் ஷா

Next Post

பிரதமர் மோடிக்கு அமித்ஷா நன்றி!

Related News

மின்கடத்தி கொள்முதல் முறைகேடு – 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகனம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

பால் கொள்முதல் விலை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது தெரியும் – முதல்வர் விஜய் பேச்சு!

மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

கோவையில் பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER ‘பிரம்மோஸ்-NG’ – சிறப்பு தொகுப்பு!

செப். 17 ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

விருதுநகர் இருக்கண்குடி மாரியம்மன் கோயில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக வணிக செயல்பாடு – கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்!

முதல்வர் அறை மாற்றப்படுவது ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies