2024 நாடாளுமன்ற தேர்தலுக்காகத் தமிழக பா.ஜ.க நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு, பிப்ரவரி 10-ம் தேதி முதல் மக்களைச் சந்தித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்த உள்ளது.
2024 நாடாளுமன்றத் தேர்தல் வரும் மார்ச் கடைசி வாரம் தொடங்கி மே மாதம் முதல் வாரம் வரை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக டெல்லியில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.
இதனிடையே, நாளுமன்றத்தில் கடந்த 1-ம் தேதி, மத்திய பா.ஜ.க அரசு சார்பில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.
நாடளுமன்றத் தேர்தலையொட்டி, கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ஜ.க தேர்தல் மேலாண்மை குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக பா.ஜ.க நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை குழு நாளை முதல் அதாவது, பிப்ரவரி 10 -ம் தேதி முதல் பொது மக்களை நேரில் சந்தித்து கருத்து கேட்பு நடத்த உள்ளது.
முதல்கட்டமாக விருதுநகரில் தென்மாவட்டங்களுக்கான தொழில், வணிகம் மற்றும் சேவை துறை சம்பந்தமான கருத்து கேட்கப்பட உள்ளது.
பா.ஜ.க-வின் இந்த அதிரடி கண்டு தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆடிப்போய் உள்ளன.