2024 மக்களவைத் தேர்தலில் சுமார் 97 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகத் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2024 மக்களவை தேர்தல் ஒருசில மாதங்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தேர்தல் முன்னேற்ப்பாட்டு பணிகளில் அரசியல் கட்சிகளும்,தேர்தல் ஆணையமும் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் சுமார் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வாக்காளர்களின் எண்ணிக்கை விட, ஆறு சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
18 முதல் 29 வயதுக்குட்பட்ட இரண்டு கோடி இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல் பாலின விகிதம் 2023ல் 940 ஆக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் 948 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.