தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய பிரதமர் மோடி : அண்ணாமலை பெருமிதம்!
Oct 25, 2026, 10:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய பிரதமர் மோடி : அண்ணாமலை பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Feb 10, 2024, 10:10 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிகள்  அனைத்தையும் நிறைவேற்றியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் என் மண் என் மக்கள் பயணத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது  சிரமங்களில் இருந்து நம்மை காப்பாற்றும் சிறுவாபுரி பாலசுப்பிரமணியன் கோவில் அமைந்திருக்கும் பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில், பொதுமக்கள் பேரன்புடனும் ஆதரவுடனும் எனது பயணம் சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 2004 – 2014, திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிப் பங்கீடு 32% மட்டுமே. ஆனால் இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  தலைமையிலான பாஜக ஆட்சியில், மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரிப் பங்கீடு 42% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நமது பாரதப் பிரதமர் மோடி  கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது கொடுத்த 295 வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறார். ராமர் கோவில், காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கம், அரபு நாடுகளில் நீக்கப்பட்ட தலாக் முறையை ஒழித்து, இஸ்லாமிய சகோதரிகளுக்குச் சட்டப் பாதுகாப்பு கொடுத்தது என, 60 ஆண்டுகளாகத் தீர்க்காமல் வைத்திருந்த சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு கண்டுள்ளார்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், 400 க்கும் அதிகமான இடங்கள் பெற்று நமது பாரதப்  பிரதமர் நரேந்திர மோடியை மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி.  நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்த, ஊழல், குடும்ப அரசியல் கட்சிகளைப்  புறக்கணித்து, தமிழகம் முழுவதும் இம்முறை துணை நிற்பதும் உறுதி என  அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: BJP Tamil Nadu state presidentannamalaiannamalai en maan en makkalprime minister modielection promises
Share
Tweet
SendShare
Previous Post

குடியரசுத் துணைத் தலைவர் மகாராஷ்டிரா பயணம்!  

Next Post

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies