இஸ்ரேல் இராணுவம் காசாவில் முதன்முறையாக சில செயற்கை நுண்ணறிவு வைத்து இயக்கப்படும் இராணுவ தொழில்நுட்பத்தை போரில் பயன்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.
இந்த போரில் குறைந்தது 27,947 பேர் கொல்லப்பட்டனர், இதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள். இந்நிலையில் தற்போது இஸ்ரேல் இராணுவம் காசாவில் முதன்முறையாக சில செயற்கை நுண்ணறிவு வைத்து இயக்கப்படும் இராணுவ தொழில்நுட்பத்தை போரில் பயன்படுத்தியுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வான் வழி மற்றும் தரையிலும் ஒரே நேரத்தில் போர் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.