நம்பிக்கை தொடர்பான விஷயத்திற்காக பெரும்பான்மை சமூகம் இவ்வளவு காலம் காத்திருந்ததில்லை : அமித் ஷா
Sep 14, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நம்பிக்கை தொடர்பான விஷயத்திற்காக பெரும்பான்மை சமூகம் இவ்வளவு காலம் காத்திருந்ததில்லை : அமித் ஷா

Murugesan M by Murugesan M
Feb 10, 2024, 06:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை உலகுக்கு உணர்த்துவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா  தெரிவித்துள்ளார். எந்த நாட்டிலும் பெரும்பான்மை சமூகத்தினர் தங்கள் நம்பிக்கை தொடர்பான விஷயத்திற்காக இவ்வளவு காலம் காத்திருந்ததில்லை எனவும் அவர் கூறினார்.

அயோத்தி ராமர் கோயில் தொடர்பாக விவாதம் இன்று மக்களவையில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது, வேறு எந்த நாட்டிலும் பெரும்பான்மை சமூகத்தினர் தங்கள் நம்பிக்கை தொடர்பான விஷயத்திற்காக இவ்வளவு காலம் காத்திருந்ததில்லை என்றார்.

ராமர் கோவில் பிரச்சனையில் பல்வேறு முனைகளில் நீண்ட போராட்டங்களில் பங்கேற்ற அனைவரையும் அவர் பாராட்டினார். ராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை உலகிற்கு எடுத்துக்காட்டியது என்று அவர் தெரிவித்தார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான மக்கள் போராட்டம் 1528 இல் தொடங்கியது. அதற்கான சட்டப் போராட்டம் 1858 இல் தொடங்கியது. இது அனைத்தும் ஜனவரி 22 அன்று முடிவுக்கு வந்தது. இது இந்தியாவின் நம்பிக்கையைப் புதுப்பித்து, பயணத்தின் தொடக்கத்தைக் குறித்தது என அவர் கூறினார்.

மோடி அரசாங்கம் முத்தலாக்கைத் தடைசெய்தது மற்றும் பல வாக்குறுதிகளை நிறைவேற்றியது என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் கலாசாரத்தை ராமாயணத்தில் இருந்து பிரிக்க முடியாது என்று கூறிய திரு ஷா, பல ஆண்டுகால போராட்டம் ராமர் கோயில் திறப்பு விழாவுடன் முடிவுக்கு வந்தது. ஜனவரி 22 ஆம் தேதி மாபெரும் இந்தியாவின் பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. விஸ்வகுரு (உலகத் தலைவர்) ஆவதற்கான பாதையில் நம்மை அழைத்துச் செல்ல இந்த நாள் மா பாரதி (தாய் இந்தியா) வழி வகுக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைகள், அபிலாஷைகள் மற்றும் சாதனைகளைக் குறிக்கும் நாள் இது என்றும் அமித் ஷா தெரிவித்தார். ராமர் கோவில் கலாச்சார மறுமலர்ச்சியின் அடையாளம் என்றும் அவர் கூறினார்.பொதுத் தேர்தலுக்குப் பிறகு 2024 இல் மோடி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: parlimentprime minister narendra modihome minister amit shahRam temple issue
Share
Tweet
SendShare
Previous Post

புரோ கபடி : வெற்றி பெறுமா தெலுங்கு டைட்டன்ஸ் அணி !

Next Post

AI தொழில்நுட்பம் மூலம் போர் புரியம் இஸ்ரேல் !

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies