மத்திய பாஜக அரசின் 5 ஆண்டு சாதனைகள் குறித்து மக்களைவில் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.
இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனை அடுத்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளில், மத்திய அரசின் 2024-25 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் நாடாளுமன்ற அமர்வு நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், முக்கிய காரணங்களுக்காக, மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது. அதன்படி இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.
17-வது மக்களவை கூட்டத்தொடரின் கடைசி நாளில், பிரதமர் நரேந்திர கூறியதாவது, இந்த ஐந்தாண்டுகள் நாட்டின் சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் பற்றியது. இந்த ஐந்தாண்டுகளில் மாற்றங்களை ஏற்படுத்திய பல சீர்திருத்தங்கள் நடந்தன. நாடு மாற்றத்தை நோக்கி நகர்கிறது. 370-வது பிரிவை நீக்கியது மற்றும் முத்தலாக் அபராதம் முதல் முக்கியத்துவம் வாய்ந்த ஜி 20 கூட்டத்தை நடத்தியது பல முக்கிய நிகழ்வுகளை மேற்கோள் காட்டினார்.
தரவு பாதுகாப்பு மசோதா, தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான கடுமையான சட்டங்கள், காலாவதியான சட்டங்களை நீக்குதல் மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட நீண்ட பட்டியலை எடுத்து கூறினார்.
புதிய பாராளுமன்ற கட்டிடம் மற்றும் பாராளுமன்ற நூலகத்தை பொதுமக்களுக்கு திறந்து வைப்பதில் இருந்து தொடங்கியது. எங்களுக்கு புதிய நாடாளுமன்ற கட்டடம் தேவை என்று எல்லோரும் கூறினார்கள். நாங்கள் அதை செய்து முடித்தோம். இதன் காரணமாக நாம் இன்று புதிய நாடாளுமன்றத்தில் அமர்ந்துள்ளோம்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை நீக்கியதே முக்கிய அம்சமாகும். காஷ்மீர் மக்கள் சமூக நீதியிலிருந்து தொலைவில் இருந்தனர். இன்று நாங்கள் அதை அவர்களிடம் கொண்டு சென்றோம் என்று கூறினார். .