தமிழக பாஜக தேர்தல் மேலாண்மை குழுவினருக்கான பயிலரங்கம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று நடைபெற்றது.
வரும் பாராளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தின் 39 பாராளுமன்றத் தொகுதிகளின் தமிழக பாஜக தேர்தல் மேலாண்மை குழுவினருக்கான பயிலரங்கம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று சென்னை காட்டாங்குளத்தூர் SRM பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பத்து ஆண்டு கால நல்லாட்சியில், நமது நாடு பெற்றுள்ள முன்னேற்றங்களையும், தமிழகத்தில், தமிழக பாஜக
சகோதர சகோதரிகளின் தொடர் கடின உழைப்பையும் பற்றிப் பேசப்பட்டது.
திமுகவின் பொய்யான குற்றச்சாட்டுக்களை முறியடிப்பதில், மக்களோடு மக்களாகப் பயணம் செய்யும் தேர்தல் பணியாளர்களின் முக்கியப் பொறுப்பு குறித்துப் பேசப்பட்டது.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, எழுத்தாளர் சகோதரி பிரியம் காந்தி-மோடி
எழுதிய, காங்கிரஸ் இல்லாமல் இருந்திருந்தால், இந்தியா எப்படி இருந்திருக்கும் என்ற ‘What if there was no Congress’ புத்தகத்தைப் பெற்றுக் கொண்டோம்.
தமிழகம் முழுவதுமிருந்து தேர்தல் பணிக் குழுவில் இடம்பெற்றிருக்கும் சுமார் 3,000 சகோதர சகோதரிகளுடன், @BJP4Tamilnadu அமைப்புப் பொதுச் செயலாளர் திரு @KesavaVinayakan, சட்டமன்றக் குழுத் தலைவர் திரு @NainarBJP, மாநிலப் பொறுப்பாளர் திரு @MenonArvindBJP, இணைப் பொறுப்பாளர் திரு…
— K.Annamalai (@annamalai_k) February 11, 2024
தமிழகம் முழுவதுமிருந்து தேர்தல் பணிக் குழுவில் இடம்பெற்றிருக்கும் சுமார் 3,000 சகோதர சகோதரிகளுடன், தமிழக பாஜக அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகன், சட்டமன்றக் குழுத் தலைவர் நைனார் நாகேந்திரன், மாநிலப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதிப் பகிர்வு மோடி பிரதமராக பதவியேற்றபோது 32 சதவீதமாக இருந்தது. தற்போது பிரதமர் அதை 42 சதவீதமாக உயர்த்தியுள்ளார். மோடி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு 30.5 ஆக இருந்தது. அப்போது அதை அதிகரிக்க வேண்டும் என மோடி கோரிக்கை வைத்தார்.
1960-ல் பல நிதிக்குழுக்கள் அமைக்கப்பட்டு மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வை தீர்மானித்தபோது மாநிலத்தின் மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் மாநிலங்களுக்கான மொத்த நிதியில் 60 சதவீதத்தை தீர்மானித்தனர். எஞ்சிய 40 சதவீத நிதியை பிற வகையில் கணக்கிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசால் நிதிப் பகிர்வாக வழங்கப்பட்டது. ஆனால், தற்போது ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை, அந்த மாநிலத்திற்கான நிதிப் பகிர்வில் 15 சதவீதம் அளவிற்கு மட்டுமே கணக்கிடப்படுகிறது,
மேலும் மாநிலத்தின் மக்களிடையே உள்ள வருவாய் வித்தியாசம் (ஏழைகள், பணக்காரர்கள் இடையே உள்ள பொருளாதார வித்தியாசம்) 40 சதவீதம் அளவு கணக்கிடப்படுகிறது. ஜிஎஸ்டி வசூலில் 50 ரூபாய் மாநிலத்திற்கு நேரடியாகவும், 21 ரூபாய் மறைமுகமாக மானியங்களாகவும் மொத்தம் 71 ரூபாய் அந்தந்த மாநிலங்களுக்கே கொடுக்கப்படுகிறது.
இந்தியா டுடே பத்திரிகை கடந்த ஆண்டு ஸ்டாலினை இந்தியாவில் most popular cm என்று கூறியபோது திமுகவினர் அதை பெருமையாக பேசினர். ஆனால் இப்போது வந்துள்ள சர்வே முடிவு பற்றி அவர்கள் எதுவுமே பேசுவதில்லை.
இதுபோன்ற காரணத்தால்தான் திமுகவினர் வடக்கு – தெற்கு பிரச்னையை மீண்டும் எடுத்து வருகிறார்கள். வடக்கு தெற்கு பிரச்னை என்பது பிய்ந்துபோன செருப்பு போன்றது, அதை மீண்டும் கொண்டு வந்தால் அதன் விளைவை திமுகவினர்தான் சந்திக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி போன்று இனிமேல் கிடைப்பது அறிது. பிரதமர் மோடி 400 சீட் வென்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார் எனத் தெரிவித்தார். பாஜக கட்சியில் நாம் எல்லாம் இருப்பது புண்ணியம் எனத் தெரிவித்தார். உங்களுக்கான பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது, அதனை சரியாக செய்து, வருகின்ற 60 நாட்களும் நமக்கு மிக முக்கியம் எனவும் மக்களை சந்தித்து நரேந்திர மோடியின் பத்து ஆண்டு கால நல்லாட்சியில், நமது நாடு பெற்றுள்ள முன்னேற்றங்கள் குறித்து தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
















