அபுதாபியில் இந்திய வம்சாவளி மக்கள், பாரத பிரதமர் மோடிக்காக ‘பார் பார் சாஹியே மோடி ஜி’ என்ற பாடலை பாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட இந்து கோயிலை பாரத பிரதமர் மோடி 14ஆம் தேதி திறந்து வைக்கிறார். அதற்காக அவர் இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்கிறார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய சமூகத்தினரையும் பிரதமர் நரேந்திர மோதி சந்திக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு ‘அஹ்லான் மோடி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வணக்கம் மற்றும் வரவேற்பு என்பது அரபு மொழியில் அஹ்லான் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டி அரங்கத்தில் நடைபெறும். இதற்காக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பாரத பிரதமர் மோடிக்காக, இந்திய வம்சாவளி மக்கள் ‘பார் பார் சாஹியே மோடி ஜி’ என்ற பாடலை பாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
‘பார் பார் சாஹியே மோடி ஜி’ என்பதற்கு மீண்டும் மீண்டும் வேண்டும் மோடி என்பதே அர்த்தம். இந்த பாடலை பாடி இந்திய வம்சாவளியினர் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.