சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை யார் என்பதை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர்கள் வீராங்கனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
A talented teenager has been named the ICC Women’s Player of the Month for January 2024 🏅
— ICC (@ICC) February 13, 2024
அதன்படி ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய 3 வீரர்கள் மற்றும் 3 வீராங்கனைகள் பரிந்துரை செய்திருந்தது.
அதில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட், இங்கிலாந்தின் ஆலி போப் மற்றும் மேற்கிந்திய அணியின் இளம் வீரரான ஷமார் ஜோசப் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இதில் மேற்கிந்திய அணியின் இளம் வீரரான ஷமார் ஜோசப் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
A Test hero has been crowned the ICC Men’s Player of the Month for January 2024 💪
— ICC (@ICC) February 13, 2024
அதேபோல் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு அயர்லாந்தின் ஏமி ஹண்டர் மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனைகளான பெத் மூனி, அலிசா ஹீலி ஆகியோர் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.
மேலும் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக அயர்லாந்து அணியின் ஏமி ஹண்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.