பல்வேறு மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் வசிக்கும் பொதுமக்களுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துரையாடினார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
தமிழக பாஜக பிற மொழி பிரிவு மாநிலத் தலைவர் K.P. ஜெயக்குமார் ஏற்பாடு செய்திருந்த, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் வசிக்கும் பொதுமக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
ராஜஸ்தானி சங்கம், ஜெயின் சங்கம் , தெலுங்கு சங்கம், கன்னட சங்கம், மலையாளம் சங்கம், மராத்தி சங்கம், சீக்கியர் சங்கம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழகத்தில் வசிக்கும் மக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தின் வளர்ச்சியில், பிற மொழிகள் சார்ந்த மக்கள் அனைவரின் பங்கும் இன்றியமையாதது.
இன்றைய மாலை, @BJP4Tamilnadu பிற மொழி பிரிவு மாநிலத் தலைவர் திரு. K.P. ஜெயக்குமார் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் வசிக்கும் பொதுமக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
ராஜஸ்தானி சங்கம், ஜெயின் சங்கம் , தெலுங்கு… pic.twitter.com/e2LyD17YaG
— K.Annamalai (@annamalai_k) February 13, 2024
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உயரிய சிந்தனையைப் போற்றும் வண்ணம் இந்த நிகழ்வு அற்புதமாக நடந்தேறியது. நிகழ்ச்சியில், தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணன் கரு நாகராஜன், மாநிலச் செயலாளர்கள் சுமதி வெங்கடேஷ் மற்றும், மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் வினோஜ் பி செல்வம் மற்றும் நிர்வாகிகள், சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.