மத்திய இணையமைச்சர் எல். முருகனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
மத்திய இணையமைச்சர், அண்ணன் எல். முருகனை இரண்டாவது முறையாகப் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்து, தமிழகத்துக்கு பெருமை சேர்த்திருக்கும், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜக தேசியத் தலைவர் JP. நட்டாவுக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிக்கும், பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷிக்கும், தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு மத்திய இணையமைச்சர், அண்ணன் திரு @Murugan_MoS அவர்களை, இரண்டாவது முறையாகப் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்து, தமிழகத்துக்கு பெருமை சேர்த்திருக்கும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கும், @BJP4India தேசியத் தலைவர் திரு @JPNadda அவர்களுக்கும்,… https://t.co/Ty0hWKOrkG
— K.Annamalai (@annamalai_k) February 14, 2024
அண்ணன் எல். முருகனின் அயராத மக்கள் பணிகள் சிறக்கவும், தமிழகத்தின் குரலாகப் பாராளுமன்றத்தில் ஒலிக்கவும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.