ஞானவாபி கோவில் வியாஸ் மண்டபத்தில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார்.
உத்தர பிரதேச வாரணாசி ஞானவாபி மசூதி இந்து கோவிலை இடித்துதான் கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து ஞானவாபி மசூதியின் கீழ் தளத்தில் இந்துக்கள் வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
மேலும் 7 நாட்களுக்குப் பின் பூஜைகள் நடத்திக் கொள்ளவும் இந்துக்களுக்கு வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து கடந்த செவ்வாய் கிழமை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞானவாபி கோவிலுக்கு சென்று அங்குள்ள வியாஸ் கா தெகானாவை வழிபட்டார்.
அங்கு நிறுவப்பட்ட சிற்பங்களையும், நந்தியையும் வணங்கினார். மாலையில் யோகி ஆதித்யநாத் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து சர்க்யூட் ஹவுஸில் பாஜக பிரதிநிதிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்தார். வளர்ச்சித் திட்டங்களையும் ஆய்வு செய்தார்.