மதுரையில் பா.ஜ.க. நிர்வாகி படுகொலை - மர்ம நபர்கள் அட்டகாசம்!
Oct 26, 2025, 06:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் பா.ஜ.க. நிர்வாகி படுகொலை – மர்ம நபர்கள் அட்டகாசம்!

Web Desk by Web Desk
Feb 15, 2024, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே பா.ஜ.க நிர்வாகி சக்திவேல் என்பவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு மாவட்ட செயலாளராக சக்திவேல் உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கீழ வல்லானந்தபுரம் பகுதியை சேர்ந்த இவர், மதுரை மாநகர் அண்ணாநகர் பகுதியில் குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வருகிறார். அதே பகுதியில் பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார்.

இன்று காலை 6 மணி அளவில் சக்திவேல் தனது வீட்டில் இருந்து, வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள சங்குநகர் பகுதியில் உள்ள குடோனுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் பேர் சக்திவேலை வழி மறித்து, பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து சக்திவேல் தப்பியோட முயன்றார். ஆனாலும், அவரை விடாமல் துரத்திச்சென்று பயங்கர ஆயுதங்களால் வெட்டினர். பின்னர், கொலையாளிகள் மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டனர்.

இதில், அதே இடத்தில் சக்திவேல் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இது தொடர்பாக, பொது மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த அண்ணாநகர் காவல்துறையினர் சக்திவேலின் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் பா.ஜ.க நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தென்மாவட்டங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் படுகொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: murderBJP in Madurai Executive Assassination
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க ராணுவ தளபதியுடன் ஜெனரல் மனோஜ் பாண்டே சந்திப்பு!

Next Post

மருதமலை முருகன் கோவில் அருகே சிறுத்தை! – பீதியில் பக்தர்கள்!

Related News

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

உத்தரகாண்ட் : அதிவேகமாக வளைவில் திரும்பிய காரால் விபத்து!

இந்திய ரயில்களை புகழ்ந்த ஸ்காட்டிஸ் இன்புளூயன்சர்!

Load More

அண்மைச் செய்திகள்

குவாங்சோ டென்னிஸ் போட்டி – ஆன் லி சாம்பியன்

கனடாவில் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை!

அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் காட்டு யானை!

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் வி.கே.சசிகலா!

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies