சென்னை சேர்ந்த தொழிலதிபர் R.N.ஜெயப்பிரகாஷ், பாஜக தேசியத் தலைவர் JP நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில்,
இந்திய நீச்சல் கூட்டமைப்பின் (SFI) தலைவராகவும், வெற்றிகரமான தொழிலதிபராகவும், கடந்த 25 ஆண்டுகளில், 10,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு, குறைந்த கட்டணத்தில் தொழிற்கல்வி வழங்கி, அவர்களது வாழ்க்கையில் வெளிச்சம் உருவாக்கியவருமான, சென்னையைச் சேர்ந்த R.N.ஜெயப்பிரகாஷ், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, கடந்த 11.02.2024 அன்று, பாஜக தேசியத் தலைவர் JP நட்டா முன்னிலையில், பாஜகவில் இணைந்தார்.
இந்திய நீச்சல் கூட்டமைப்பின் (SFI) தலைவராகவும், வெற்றிகரமான தொழிலதிபராகவும், கடந்த 25 ஆண்டுகளில், 10,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு, குறைந்த கட்டணத்தில் தொழிற்கல்வி வழங்கி, அவர்களது வாழ்க்கையில் வெளிச்சம் உருவாக்கியவருமான, சென்னையைச் சேர்ந்த திரு R.N.ஜெயப்பிரகாஷ் அவர்கள், நமது… pic.twitter.com/B7NvuJVwpk
— K.Annamalai (@annamalai_k) February 14, 2024
இந்திய நீச்சல் கூட்டமைப்பின் தலைவராக, இரண்டாவது முறையாகத் தொடர்ந்து பொறுப்பு வகிக்கும் R.N.ஜெயப்பிரகாஷ் அவர்களின் அரசியல் அனுபவமும், மக்கள் பணிகளும், தமிழக பாஜகவுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவரை வரவேற்று, கட்சிக்கும், பொதுமக்களுக்கும் அவரது மேலான பங்களிப்பைக் கோருவதில் மகிழ்ச்சியடைகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.