ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் 108 முறை சூரிய நமஸ்காரம் இன்று நடைபெற்றது.
க்ரிதா பார்தி என்ற அமைப்பு ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் ராம்நிவாஸ் பாக், ஆல்பர்ட் ஹால் முன் 108 முறை சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று 108 சூரிய நமஸ்காரத்தை செய்தனர். இந்நிகழ்வில் ஆர்எஸ்எஸ் பிராந்திய ‘பிரசாரக்’ நிம்பரம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். மாநில அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டார்.
க்ரிதா பார்தி என்பது பான் இந்தியா அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பு நாட்டின் இளைஞர்களை விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
1992 இல் புனேயில் நிறுவப்பட்ட இந்த அமைப்பு இந்திய இளைஞர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் செயல்படுகிறது. நாடு முழுவதும் உள்நாட்டு மற்றும் கிராமப்புற விளையாட்டுகளை ஊக்குவிக்கிறது.
மத மற்றும் ஆன்மிக பின்னணிக்கு அப்பால் சூரிய நமஸ்காரம் என்பது, உடல் நலன் சார்ந்து உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.