சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய அதிபர் புடினை எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். மேலும் ஊழல் எதிர்ப்பு அமைப்பையும் அவர் தொடங்கினார். இந்நிலையில் அறக்கட்டளை மூலம் பணத்தை கையாடல் செய்த வழக்கில் அலெக்ஸி நவல்னி கைது செய்யப்பட்டார்.
அவருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து 2021 ஆண்டு முதல் யமலோ-நெனெட்ஸ் பகுதியில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவர் உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக சிறைச்சாலை நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், சிறையில் நவல்னி நடைபயிற்சி சென்ற போது மயக்கம் அடைந்து சுயநினைவை இழந்ததாகவும், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் உயிரிழந்த விட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.