பா.ஜ.க-வின் தேசிய குழு கூட்டம் டெல்லியில் இன்று துவங்கியது. அங்கு பாரத் மண்டபத்தில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் இரண்டு நாட்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், பா.ஜ.க-வால் மட்டுமே இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும் என்றவர்,
பாரதப் பிரதமர் மோடியால் இந்தியா தற்போது அபரீதமான வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவை உலகமே வியந்து பார்க்கிறது. மக்களும் மோடியை விரும்புகின்றனர். எனவே, மூன்றாவது முறையும் பா.ஜ.க. ஆட்சி அமையும். மோடியே பிரதமர் ஆவார். இதனால் பா.ஜ.கவினர் மகிழ்ச்சியில் உள்ளனர் என உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும், பேசிய அவர், தமிழகத்தில் தி.மு.க அமைச்சர்கள் சொத்தை கைப்பற்றி வித்தாலே, தமிழகத்தின் 8 லட்சம் கோடி கடனை அடைத்துவிடலாம். தமிழகத்தில் பா.ஜ.க-விற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது என்றார்.