உலக டேபிள் டென்னிஸ் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் சிலியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது.
தென்கொரியாவில் உள்ள பூசன் நகரில் உலக டேபிள் டென்னிஸ் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்கள் பிரிவில் 40 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்த 40 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 40 அணிகளும் தற்போது லீக் சுற்றில் விளையாடி வருகிறது.
இதில் இந்தியா குரூப் -3 யில் இடம்பிடித்துள்ளது. இந்தியாவுடன் குரூப் -3 யில் உள்ள சிலி அணியுடன் நேற்று இந்தியா விளையாடியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் சிலியை வீழ்த்தி இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியது. இந்திய அணியில் சரத் கமல், ஹர்மீத் தேசாய், சத்யன் ஆகியோர் தங்களது போட்டியில் வெற்றி பெற்றனர்.