கேரளா திரையரங்கு சங்கத்தினர் ஸ்டிரைக் அறிவிப்பு - காரணம் என்ன ?
Mar 15, 2026, 02:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளா திரையரங்கு சங்கத்தினர் ஸ்டிரைக் அறிவிப்பு – காரணம் என்ன ?

Murugesan M by Murugesan M
Feb 18, 2024, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு படம் தியேட்டர்களில் வெளியான பிறகு ஆறு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்பதை தயாரிப்பாளர்கள் மீறுவதாக கேரள திரைப்பட தியேட்டர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சினிமா என்பது அனைவருக்கு பிடித்தமான ஒன்று. அனைவர்க்கும் படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த காலா கட்டத்தில் படம் பார்ப்பதற்கான வசதியாக என்றால் அது திரையரங்குகள் மட்டுமே இருந்தது.

மக்கள் கூட்டக் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பார். அதன் பின்னர் தொலைக்காட்சி வந்தது. திரையரங்கில் வெளிவந்து ஒரு வருடலுக்கு மேல் ஆனா படங்களை தொலைகாட்சியில் ஒளிபரப்புவார்கள், திரையரங்கில் தவறவிட்ட படங்களை  தொலைக்காட்சியில் பார்ப்பவர்களும் உண்டு.

அதன் பின் தற்போது அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் வந்தது. பின்னர் சிலர் திருட்டு தனமாக படங்களை போனில் இறக்கி பார்க்க தொடங்கினர். அதன் பின்னர் படத்தின் உரிமையாளர்கள் பணம் கொடுத்தால் போனில் படம் பார்க்கலாம் என்பதை ஓடிடி மூலம் அறிமுகபத்தினர்.

அப்படி ஓடிடி வந்ததிலிருந்த்து திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கும் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. பெரிய நடிகர்களின் படம் வந்தால் மட்டுமே மக்கள் திரையரங்கிற்கு சென்றனர்.

தியேட்டர்களுக்கு வந்து திரைப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. இது தமிழகத்திற்கு மட்டுமல்ல மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும். தெலுங்குத் திரையுலகம் மட்டும் ஓரளவிற்கு தாக்குப் பிடிக்கிறது என்று சொல்கிறார்கள்.

அதே சமயம் நல்ல படங்களைக் கொடுக்கும் மலையாளத் திரையுலகத்திலும் தியேட்டர்கள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன என்கிறார்கள். ஒரு படம் தியேட்டர்களில் வெளியான பிறகு ஆறு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்பதை தயாரிப்பாளர்கள் மீறுவதாக கேரள திரைப்பட தியேட்டர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அது மட்டுமல்லாது வருமானத்தைப் பகிர்வது, புராஜக்டர்களை தியேட்டர்களில் நிர்மாணிப்பது உள்ளிட்ட சில விஷயங்கள் குறித்தும் கடந்த ஆறு மாத காலமாக தயாரிப்பாளர்கள் சங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

சில தயாரிப்பாளர்கள் திரைத்துறையை அவர்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். தியேட்டர் ஓனர்களை மிரட்டுகிறார்கள் என்றும் தியேட்டர்கள் சங்கத்தினர் சார்பில் முன்வைக்கப்படுகிறது.

இதற்கான தீர்வுகள் கிடைக்கும் வரை பிப்ரவரி 22ம் தேதி முதல் புதிய படங்களை தியேட்டர்களில் திரையிட மாட்டோம் என்றும் அறிவித்துள்ளார்கள். இது தொடர்பான பேச்சுவார்த்தை நாளை நடைபெறலாம் எனத் தெரிகிறது.

தமிழில் புதிய படங்கள் வெளியான 4 வாரங்களுக்குள் ஓடிடி தளங்களில் வெளியாகிவிடுகிறது. அதற்கு தமிழக தியேட்டர்கள் சங்கத்தினர் ஏற்கெனவே எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளார்கள்.

ஹிந்தியில் மட்டும் 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிடுகிறார்கள். அப்படி ஒப்பந்தம் போடாத படங்களை தங்களது மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அந்த சங்கத்தினர் திரையிடுவதேயில்லை.

Tags: KeralaCinemaMiantheaterott
ShareTweetSendShare
Previous Post

நடிகை ராஷ்மிகா மந்தனா பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – நடந்தது என்ன?

Next Post

சிங்கப்பூரில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்த 12th பெயில் திரைப்படம் !

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies