இந்தோனேசியாவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிரபோவோ சுபியாண்டோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தோனேசிய அதிபராக பிரபோவோ சுபியாண்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.1951 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் பிறந்த பிரபோவோ, புகழ்பெற்ற இந்தோனேசியப் பொருளாதார நிபுணரான சுமித்ரோ ஜோஜோஹடிகுசுமோவின் மகன். முன்னாள் சிறப்புப் படைத் தளபதியும், பாதுகாப்பு அமைச்சருமான பிரபோவோ சுபியாண்டோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிரபோவோ சுபியாண்டோவுக்கும், இந்தோனேசிய மக்களுக்கு வாழ்த்துக்கள். இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த புதிய அதிபருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம் என கூறியுள்ளார்.