சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்து இளைஞன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சத்தீஸ்கரின் கவர்தா லால்பூர் கிராமத்தில் சத்ரம் யாதவ் என்ற இந்து இளைஞள் மர்ம கும்பலால் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அயோத்தியில் ராமர் கோவில் விழா நடைபெறும் முன் அச்சத்தை தூண்டும் முயற்சியாக இந்த கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சத்ராம் யாதவுடன் வேண்டுமென்றே தகராறு செய்து அவரை கொலை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அயாஸ், இட்ரிஸ், ரபீக் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு (UAPA) செய்துள்ளனர். அயாஸ் கான் கைது செய்யப்பட்டு அவரது தொலைபேசியை சோதனையிட்டபோது, அவர் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு பலமுறை பயணம் செய்துள்ளது தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இட்ரிஸ் கான் என்பவன் சந்தேகத்திற்குரிய நபர்களுடன் பேசியது குறித்து தகவல் கிடைத்துள்ளதாகம் போலீசார் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.