இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 893 ஆக உள்ளது.
கடந்த நவம்பர் மாதம் முதல் ஜே.என்.1 எனும் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், காலை 8 மணி நிலவரப்படி நாட்டில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை, 893 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 84 பேர் மீண்டுள்ளனர். தற்போது வரை 4 கோடியே 44 இலட்சத்து 93 ஆயிரத்து 798 பேர் மீண்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 42 பேருக்கும், டெல்லியில் 15 பேருக்கும், கர்நாடகாவில் 14 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் தற்போது வரை 220 கோடியே 67 இலட்சத்து 93 ஆயிரத்து 900 டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.