சமாஜ்வாதி கட்சியின் தமிழக அமைப்பு கூண்டோடு கலைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
முலாயம் சிங் யாதவால் ஆரம்பிக்கப்பட்டது தான் சமாஜ்வாதி கட்சி. இந்த கட்சிக்கு உத்தரப்பிரதேசம், உத்தரக்காண்ட், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் அங்கு ஒன்றும், இங்கு ஒன்றுமாக செயல்பட்டு வருகிறது.
இதேபோல, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. தமிழக சமாஜ்வாதி கட்சியின் தலைவராக, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த இளங்கோ யாதவ் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தமிழகத்தில் சமாஜ்வாதி கட்சியின் நிர்வாக அமைப்பு முழுமையாகக் கலைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, தி.மு.க தன்னை அழைத்துப் பேச்சவில்லை என்பதால், தமிழக சமாஜ்வாதி கட்சியின் தலைவராகச் சிதம்பரம் இளங்கோ யாதவ் தி.மு.க-வுக்கு எதிராக 36 தொகுதிகளில் தனியாக வேட்பாளர்களை அறிவித்தார்.
இந்த நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தமிழக அமைப்பு கூண்டோடு கலைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். தி.மு.க-வுக்காக, தமிழக பிரிவை எப்படி கலைக்கலாம்? என சமாஜ்வாதி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொந்தளிக்கின்றனர்.