2023-ஆம் ஆண்டில் தூய்மை தரவரிசையில் குப்பையற்ற நகரங்கள் பட்டியலில், 5 நட்சத்திர அந்தஸ்தை பெற்று திருப்பதி ஒரு முன்னோடி நகரமாக உள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பாக திருப்பதி உள்ளது. ஸ்வச் சர்வேக்ஷன் 2023 எனப்படும் தூய்மை தரவரிசையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் திருப்பதி 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இது மட்டுமல்லாமல், 5 நட்சத்திர குப்பையில்லா நகரம் (GFC) மற்றும் தண்ணீர் பிளஸ் மதிப்பீட்டைப் பெற்று, நாட்டின் தூய்மையான நகரங்களில் முக்கியமானதாக திருப்பதி உள்ளது.
திருப்பதியில் சராசரியாக ஒரு நாளைக்கு 115 டன் ஈரக் கழிவுகள், 15 டன் உணவுக் கழிவுகள், 61 டன் உலர் கழிவுகள், ஒரு டன் ஆபத்தை ஏற்படுத்தும் கழிவுகள் மற்றும் இரண்டு டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகிறது.
இந்த நகரம் வலுவான கழிவு மேலாண்மைக்கு முன்னுரிமை அளித்துள்ளது. சேகரிக்கப்படும் அனைத்து கழிவுகளும் அந்தந்த கழிவு செயலாக்கம் மற்றும் மேலாண்மை அமைப்புகளின் அறிவியல் பூர்வமாக பதப்படுத்தப்படுகின்றன.
திருப்பதி நகராட்சி, துப்புரவு சேவைகளை உறுதி செய்வதற்காக கிட்டத்தட்ட 1,000 தூய்மைப் பணியாளர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளது. முறையாக மறுசுழற்சி செய்யக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகள் பிரிக்கப்படுகின்றன.
மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் மறுசுழற்சி நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மற்றவை ஆர்.டி.எஃப்-க்கு (கழிவிலிருந்து எரிபொருள்) அனுப்பப்படுகின்றன அல்லது சிமெண்ட் தொழிற்சாலைகளின் இணை செயலாக்கத்திற்கு உட்படுத்தப்படுகின்றன.
மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக், டால்மியா சிமெண்ட்ஸில் இணை செயலாக்கத்திற்கு அனுப்பப்படுகிறது.
திருப்பதியின் ராமாபுரம் குப்பை கிடங்கு தற்போது முழுமையாக சீரமைக்கப்பட்டு, கூடுதலாக 25.65 ஏக்கர் நிலம் சேர்க்கப்பட்டுள்ளது. தூய்மை முன்முயற்சியில் திருப்பதி ஒரு முன்னோடி நகரமாக உள்ளது.