குப்பையற்ற நகரங்கள்: திருப்பதிக்கு 5 நட்சத்திர அந்தஸ்து!
Sep 13, 2026, 02:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குப்பையற்ற நகரங்கள்: திருப்பதிக்கு 5 நட்சத்திர அந்தஸ்து!

Murugesan M by Murugesan M
Feb 20, 2024, 05:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2023-ஆம் ஆண்டில் தூய்மை தரவரிசையில் குப்பையற்ற நகரங்கள் பட்டியலில், 5  நட்சத்திர அந்தஸ்தை பெற்று திருப்பதி ஒரு முன்னோடி நகரமாக உள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நகர்ப்புற  உள்ளாட்சி அமைப்பாக திருப்பதி உள்ளது. ஸ்வச் சர்வேக்ஷன் 2023 எனப்படும் தூய்மை தரவரிசையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் திருப்பதி 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இது மட்டுமல்லாமல், 5 நட்சத்திர குப்பையில்லா நகரம் (GFC) மற்றும்  தண்ணீர் பிளஸ் மதிப்பீட்டைப் பெற்று, நாட்டின் தூய்மையான நகரங்களில் முக்கியமானதாக திருப்பதி உள்ளது.

திருப்பதியில் சராசரியாக ஒரு நாளைக்கு 115 டன் ஈரக் கழிவுகள், 15 டன் உணவுக் கழிவுகள்,  61 டன் உலர் கழிவுகள், ஒரு டன்  ஆபத்தை ஏற்படுத்தும் கழிவுகள் மற்றும் இரண்டு  டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகிறது.

இந்த நகரம் வலுவான கழிவு மேலாண்மைக்கு முன்னுரிமை அளித்துள்ளது. சேகரிக்கப்படும் அனைத்து கழிவுகளும் அந்தந்த கழிவு செயலாக்கம் மற்றும் மேலாண்மை அமைப்புகளின் அறிவியல் பூர்வமாக பதப்படுத்தப்படுகின்றன.

திருப்பதி நகராட்சி, துப்புரவு சேவைகளை உறுதி செய்வதற்காக கிட்டத்தட்ட 1,000 தூய்மைப் பணியாளர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளது.  முறையாக மறுசுழற்சி செய்யக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகள் பிரிக்கப்படுகின்றன.

மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் மறுசுழற்சி நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மற்றவை ஆர்.டி.எஃப்-க்கு (கழிவிலிருந்து எரிபொருள்) அனுப்பப்படுகின்றன  அல்லது சிமெண்ட் தொழிற்சாலைகளின் இணை செயலாக்கத்திற்கு உட்படுத்தப்படுகின்றன.

மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில் மறுசுழற்சி செய்ய  முடியாத பிளாஸ்டிக், டால்மியா சிமெண்ட்ஸில் இணை செயலாக்கத்திற்கு அனுப்பப்படுகிறது.

திருப்பதியின் ராமாபுரம் குப்பை கிடங்கு தற்போது முழுமையாக சீரமைக்கப்பட்டு, கூடுதலாக 25.65 ஏக்கர் நிலம் சேர்க்கப்பட்டுள்ளது. தூய்மை முன்முயற்சியில் திருப்பதி ஒரு முன்னோடி நகரமாக உள்ளது.

Tags: TirupatiSwachh Survekshan5 Star GFCWater Plus Ranking
Share
Tweet
SendShare
Previous Post

உலகத் தலைவர்களில் பிரகாசமான நட்சத்திரம் பிரதமர் மோடி – ராஜ்நாத் சிங்

Next Post

மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் தேர்வு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies