தமிழின் பெருமையை, செழுமையை, உலகெங்கும் கொண்டு செல்பவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
உலகெங்கும் உள்ள மொழிகளின் பன்முகத் தன்மையைப் போற்றுவதற்கும், மொழியியல் கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், சர்வதேச தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
உலகெங்கும் உள்ள மொழிகளின் பன்முகத் தன்மையைப் போற்றுவதற்கும், மொழியியல் கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், சர்வதேச தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
உலக மொழிகளில் தொன்மையானதும் இனிமையானதுமானது நம் தமிழ் மொழி என்பதற்கும், தமிழின் பெருமையை, செழுமையை,… pic.twitter.com/ZA7VjHmKgH
— K.Annamalai (@annamalai_k) February 21, 2024
உலக மொழிகளில் தொன்மையானதும் இனிமையானதுமானது நம் தமிழ் மொழி என்பதற்கும், தமிழின் பெருமையை, செழுமையை, உலகெங்கும் கொண்டு செல்லும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே சாட்சி.
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற மகாகவியின் வாக்கிற்கிணங்க, பல மொழிகள் கற்போம். நம் தாய்மொழி தமிழின் பெருமையை உலகறியச் செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.