ரூ.40,000 கோடி செலவில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 550 ரயில்வே நிலையங்களை மேம்படுத்தும் பணியை பாரத பிரதமர் நரேந்திர அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கயுள்ளார்.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 550 ரயில்வே நிலையங்களில் மேற்கூரை அமைத்தல் மற்றும் நகர மையங்களை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளது.
ரூ.40,000 கோடி செலவில் 550 பாரத் ரயில் நிலையங்களில் உள்ள கூரைகள் மற்றும் நகர மையங்களை மேம்படுத்தும் திட்டத்திற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி வீடியோ கான்பெரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டவுள்ளார்.
மேலும் 2,000க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் நடைபெறும் விழாவில், பல்வேறு மாநிலங்களில் சுமார் 1,500 சாலை மேம்பாலங்கள் மற்றும் கீழ்பாலங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் 4000 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு “2047 – விக்சித் பாரத் கி ரயில்வே” என்ற தலைப்பில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது.
இதில் ஏறக்குறைய நான்கு இலட்சம் மாணவர்கள் வெவ்வேறு போட்டிகளில் பங்குபெற உள்ளனர். இதில் 50,000 மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் ரயில்வே மேலாளர்கள் மற்றும் மூத்த ரயில்வே அதிகாரிகளால் விழாவின் போது வழங்கப்படவுள்ளது.