திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே டிராக்டா மீது கார் மோதிய விபத்தில், 4 பேர் சம்பவ இத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் கீழ்பென்னாத்தூர் வழியாக சென்று கொண்டிருந்த போது, முன்னாள் சென்ற டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். டிராக்டர் ஓட்டுநருக்கு கையில் முறிவு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதியில் இருந்த மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.