அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகும் சில தலைவர்கள் வெறுப்பின் பாதையை விடவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் மிகப்பெரிய சோமநாத் கோவிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சிவன் கோவிலான வாலிநாத் கோயில் மெஹ்சானா மாவட்டம் தாராப் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் பிரான் பிரதிஷ்டை விழா இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, சாமி தரிசனம் செய்தார். பின்னர் விழாவில் உரையாற்றிய அவர், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டாலும், அரசியல் தலைவர்கள் சிலர் தொடர்ந்து எதிர்மறையாகவே வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
வெறுப்பின் பாதையை விட்டு அவர்கள் வெளியேற தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார். ராமரின் இருப்பு குறித்து கேள்வி எழுப்பியவர்களும், கோயில் கட்டுவதில் தடை ஏற்படுத்தியவர்களும் இதே தலைவர்கள் தான் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாட்டில் ஒருபுறம் கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன, மறுபுறம் ஏழைகளுக்கு லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன என்றும் பிரதமர் கூறினார்.