விவசாயிகளின் நலனுக்காக அரசு உறுதிபூண்டுள்ளது எனத் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராகவே உள்ளது என்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார், விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை உறுதி செய்ய பிரதமர் மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்,
நாங்கள் முன்கூட்டியே பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தோம், இன்றும் தயாராக இருக்கிறோம், எதிர்காலத்திலும் அவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தயாராகவே இருக்கிறோம் என்றார்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் அதிக வளர்ச்சியை அடையவும் மோடி அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளை தாக்கூர் எடுத்துரைத்தார். குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு இரட்டிப்பாக்கியுள்ளதாகவும், கொள்முதலை இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
2024-25 பருவத்திற்கான கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதாய விலையை குவிண்டாலுக்கு 8% உயர்த்தி ரூ.340 ஆக உயர்த்துவதற்கான அமைச்சரவை முடிவு குறித்து அமைச்சர் கூறுகையில், “உலகிலேயே கரும்புக்கு இந்தியா அதிக விலை கொடுக்கிறது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட விலை கரும்புக்கான ஏ2 பிளஸ் ஃபார்முலாவை விட 107% அதிகம். ஏ2 என்பது விவசாயிகள் ரசாயனங்கள், உரங்கள், விதைகள் மற்றும் கூலியாட்களை செலவுக்கான அனைத்தையும் உள்ளடக்கியது, அதே நேரத்தில் ஏ2 + குடும்ப உழைப்பானது குடும்ப உழைப்பு வடிவத்தில் ஏற்பட்ட உண்மையான செலவு மற்றும் மறைமுக செலவை உள்ளடக்கியது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச குறைந்தபட்ச ஆதரவு விலையை தேசிய ஜனநாயக கூட்டணி 10 ஆண்டுகளில் வழங்கியதோடு ஒப்பிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளில் கோதுமை, நெல், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய மோடி அரசு ரூ.18.39 லட்சம் கோடியை செலவிட்டுள்ளது என்றும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி ரூ.5.5 லட்சம் கோடியை மட்டுமே செலவிட்டுள்ளது என்று கூறினார்.
உரங்கள் குறித்து அமைச்சர் கூறுகையில், “உலகம் முழுவதும் உரங்களின் விலை அதிகரித்த போதிலும், விவசாயிகளுக்கு உரங்களின் விலையை அதிகரிக்க நாங்கள் அனுமதிக்கவில்லை. விவசாயிகளுக்கு உரங்கள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி வரை மானியம் வழங்கியது என்றார்.