தனது பணியை வெற்றிகரமாக செய்யும் ஆதித்யா எல் 1 - புதிய கண்டுபிடிப்பு!
Sep 9, 2025, 01:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனது பணியை வெற்றிகரமாக செய்யும் ஆதித்யா எல் 1 – புதிய கண்டுபிடிப்பு!

Web Desk by Web Desk
Feb 23, 2024, 02:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம், கரோனல் மாஸ் எஜெக்ஷனை கண்டறிந்து, அதை ஆய்வு செய்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 2 ஆம் தேதி சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் எனும் எல்-1 புள்ளியில், பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை சமமாக இருக்கும்.

அந்தப் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆதித்யா விண்கலம், சூரிய புறவெளியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு உள்ளிட்டவை குறித்து ஆராய உள்ளது.

ஏறத்தாழ 127 நாட்கள் பல கட்ட பயணத்தை மேற்கொண்டு ஆதித்யா விண்கலம் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி எல்-1 புள்ளியை இலக்கில் சரியாக நிலை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் விண்கலத்தில் உள்ள கருவிகள் தற்போது செயல்பட தொடங்கியுள்ளன. அதாவது, விண்கலத்தில் பாபா(PAPA) எனும் கருவி இணைக்கப்பட்டிருந்தது.

இதன் வேலை, சூரியனிலிருந்து வெளிவரும் அதிக அளவு சூரிய துகள்களின் வெடிப்பை(கரோனல் மாஸ் எஜெக்ஷன்) கண்காணித்து அதை ஆய்வு செய்வதுதான். அந்த வகையில் தனது பணியை பாபா கருவி சிறப்பாக செய்திருப்பதாக இஸ்ரோ கூறியுள்ளது.

கடந்த 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் சூரியனிலிருந்து அதிக அளவு சூரிய துகள்களின் வெடிப்பு ஏற்பட்டிருப்பதை இக்கருவி சரியாக கண்டுபிடித்திருக்கிறது. பாபா ஒரே கருவியாக இருந்தாலும், இதில் இரண்டு சென்சார்கள் இருக்கின்றன.

இந்த சென்சார்கள் சூரியக் காற்றின் துகள்களின் அளவு மற்றும் அது எந்த திசையிலிருந்து வருகிறது என்பதை அளவிட பயன்படுகிறது.

Aditya-L1 Mission:
PAPA payload has been operational and performing nominally.

It detected the solar wind impact of Coronal Mass Ejections (CMEs) including those that occurred during Feb 10-11, 2024.

Demonstrates its effectiveness in
monitoring space weather conditions.… pic.twitter.com/DiBtW4tQjl

— ISRO (@isro) February 23, 2024

இன்றைய தேதியில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க எலக்ட்ரானிக் சாதனங்களைதான் நாம் பயன்படுத்தி வருகிறோம். அப்படி இருக்கையில் காந்த புயல் காரணமாக அந்த சாதனங்கள் செயலிழக்க கூடும்.

எனவே இந்த பேரழிவை முன்கூட்டியே கண்காணிக்க கரோனல் மாஸ் எஜெக்ஷனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். இந்த பணியைதான் இந்தியாவின் ஆதித்யா எல்1 வெகு சிறப்பாக செய்து வருகிறது என்று இஸ்ரோ தற்போது உறுதி செய்துள்ளது.

Tags: ISROaadhithya-L1
ShareTweetSendShare
Previous Post

நிலவில் தரையிறங்கிய முதல் தனியார் விண்கலம்!

Next Post

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு : தள்ளுபடி செய்ய ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் மறுப்பு!

Related News

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

கோவை : உணவுக்கு ரூ.1,473 கட்டணமாக வசூலித்த ஸ்விக்கி நிறுவனம் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா- மர்தானி கேல் தற்காப்பு கலையை நிகழ்த்தி அசத்திய பெண்கள்!

தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!

நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன – முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies