நாட்டின் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
11 மாநிலங்களின் 11 முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்களில் (பிஏசிஎஸ்) செய்யப்படும் ‘கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம்’ என்ற முன்னோடித் திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது நாடு முழுவதும் உள்ள 18,000 பிஏசிஎஸ்களில் கணினிமயமாக்கலுக்கான திட்டம் ஆகும்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
நாட்டின் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துவதற்கான எந்த முயற்சியையும் நமது அரசு விட்டு வைக்கவில்லை. இன்று பாரத மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியானது அதில் ஒரு முக்கியமான படியாகும். இதில் பங்கேற்க மிகவும் ஆர்வமாக உள்ளேன் என கூறியுள்ளார்.