பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக, திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே, முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாகவும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகின்றனர். குறிப்பாக, பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்வதற்காக வருகின்றனர்.
பௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தென்னக இரயில்வே சார்பிலும், அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பிலும், சிறப்பு இரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இன்று மாசி மாத பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
அதன்படி இன்று மதியம் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் திருவண்ணாமலை – விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் – 06129) விழுப்புரத்துக்கு பிற்பகல் 2.15 மணிக்கு வந்தடையும்.
இந்த ரயில் தண்டரை, அண்டம்பள்ளம், ஆதிச்சனூர், திருக்கோவிலூர், ஆயந்தூர், மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் ஆகிய ரயில் நிலையங்களில், நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் தெரிவித்துள்ளது.