2027ஆம் ஆண்டில் 100 சதவீத உணவு தானியங்களை சேமிக்க முடியும் என் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நாட்டின் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, கூட்டுறவு துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார்.
உலகின் மிகப்பெரிய உணவு தானிய சேமிப்பு திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. எங்கள் அமைச்சகம் திட்டத்தின் ஆவணத்தை அனுப்பியபோது, திட்டத்தை தடையின்றி செயல்படுத்துவதற்காக பிரதமர் மோடி 6 ஆலோசனை கூட்டங்களை நடத்தினார்.
பிரதமர் ஆலோசனையின்படி இன்று இந்த திட்டம் தொடங்கப்பட்ள்ளது. பிரதமரால் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைகளின்படி, 500 குடோன்களுக்கான அடிக்கல் நாட்டும் பணியும் இன்று நடைபெறுகிறது என்றார்.
நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்களில் 47% மட்டுமே நம் நாட்டில் சேமிக்க முடியும். அதே திறன் அமெரிக்காவில் 161%, பிரேசிலில் 149%, கனடாவில் 148%, சீனாவில் 160 %. சேமிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
எனவே விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சேமித்து தங்களுக்கு ஏற்ற விலையில் விளைவிக்கலாம். இத்திட்டம் தொடங்கப்பட்ட பிறகு 2027ல் கூட்டுறவு மூலம் 100% சேமிப்பு திறனை எட்ட முடியும்.
பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின் கீழ், கணினி மற்றும் நவீன விவசாயம் தொடர்பான அதிநவீன உபகரணங்களான ட்ரோன்கள், டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள் மற்றும் தெளிக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை கொண்ட அறிவியல் மற்றும் நவீன சேமிப்பு அமைப்பை உருவாக்க உள்ளோம் என அமித் ஷா தெரிவித்தார்.
125 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டுறவுத் துறைக்கு தனி அமைச்சகம் அமைத்து புது வாழ்வு அளித்தவர் பிரதமர் மோடி என்றும், 11 பிஏசிஎஸ் குடோன்கள் தொடங்கப்பட்டு 500 குடோன்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது என்றும் அவர் கூறினார்.
65000 PACS இல் 18,000 கணினி மயமாக்கப்பட்டுள்ளது. மேலும் 30,000 தேர்தலுக்கு முன் கணினிமயமாக்கப்படும் என்றும், ஆகஸ்ட் மாதத்திற்குள் அனைத்து பிஏசிஎஸ்களும் கணினிமயமாக்கப்படும் என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.