அடுத்த பிரதமர் யார் என தெரிந்து மக்கள் வாக்களிக்கப்போகும் ஒரே தேர்தல் : அண்ணாமலை
Jul 23, 2025, 06:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த பிரதமர் யார் என தெரிந்து மக்கள் வாக்களிக்கப்போகும் ஒரே தேர்தல் : அண்ணாமலை

5-ஆவது தமிழ்சங்கம் என்றால் பிரதமர் மோடி பெயர்தான் நினைவுக்கு வரும் : அண்ணாமலை

Web Desk by Web Desk
Feb 25, 2024, 10:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்த பிரதமர் யார் என தெரிந்து மக்கள் வாக்களிக்கப்போகும் ஒரே தேர்தல்  வரும் 2024 மக்களவை தேர்தல் தான் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் பயணத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, மதுரை மண் அரசியல் மாற்றத்திற்கான மண். இந்த மண்ணில் எப்போதுமே புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று எண்ணும் மக்கள் நிறைந்த மண். எல்லா தலைவர்களும் முதல் மாநாட்டை மதுரையில் தான் நடத்த விரும்புவார்கள். தமிழக அரசியலின் திருப்புமுனை அனைத்துமே மதுரையில் இருந்தே தொடங்கியிருக்கின்றன. இத்தனை ஆண்டுகளாக, தடம் மாறியிருக்கும் தமிழக அரசியல் களத்தைச் சரி செய்வதற்கான ஒரு தேர்தலாக இந்த 2024 பாராளுமன்ற தேர்தல் அமையும். ஒவ்வொரு தேர்தலின்போதும், யார் வெற்றி பெறுவார்கள் என்று உறுதியாகத் தெரியாமல்தான் மக்கள் வாக்களிப்பார்கள்.

வரலாற்றில் முதன்முறையாக, வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி 400 தொகுதிகளுக்கும் மேல் பெற்று, மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்க உள்ளார் என்ற தேர்தல் முடிவுகள் இந்திய மக்கள் அனைவருக்கும் நிச்சயமாகத் தெரிந்துள்ள ஒரே தேர்தல் இதுதான்.

தமிழகத்தில் மக்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேர்மையான அரசியல் மாற்றத்திற்காக, இந்தத் தேர்தலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழக அரசியலைச் சுத்தம் செய்து, சாமானிய மக்களுக்கான அரசியலைக் கொண்டு வர, ஊழலை, அடாவடித்தனத்தை, குடும்ப அரசியலை, மக்களை வெறும் வாக்கு வங்கிகளாகப் பார்க்கும் மலிவான அரசியலை, தமிழகத்தில் இருந்து அகற்றுவதற்கான முதற்படியாக இந்த பாராளுமன்றத் தேர்தலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நம்முடைய குழந்தைகள் ஒரு நல்ல சமுதாயத்தில், ஒளிமயமான தமிழகத்தில், உலகின் முதன்மை நாடாக மாறிக் கொண்டிருக்கும் நமது இந்திய நாட்டில் நன்றாக வாழ வேண்டுமென்றால், வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் மோடி அவர்களை நாம் தேர்ந்தெடுக்கத் தவறக்கூடாது என்பதில் அனைத்து மக்களும் தெளிவாக இருக்கிறார்கள்.

சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த பெருமைக்குரியவர்கள் நாம். முதல் மூன்று தமிழ்ச் சங்கம் நமக்குத் தெரியும். நான்காவது சங்கத்தை, ஐயா பாண்டித்துரை தேவர் சிறப்பாக நடத்திக் காட்டினார். இன்று நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உலகெங்கும் தமிழ் மொழியின் பெருமைகளைக் கொண்டு சென்று, ஐந்தாவது தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதுவரை தமிழ்நாட்டுக்குள் மட்டுமே திராவிடக் கட்சிகள் வைத்திருந்த நம் தமிழ் மொழியின் தொன்மையையும், செழுமையையும், கலாச்சாரத்தையும், கடந்த பத்து ஆண்டுகளில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உலகெங்கும் கொண்டு சென்றிருக்கிறார்.

திருக்குறள் இன்று 39 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஐ.நா சபையில் நமது தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் வரிகளை மேற்கோள் காட்டினார். அனைத்து மாநிலங்களும் தமிழ் பயில ஊக்குவிக்க வேண்டும் என்று பிற மாநில மக்களிடம் கேட்டுக் கொண்டார். எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களிடம், திருக்குறளைக் காட்டி ஊக்கப்படுத்தினார்.

2021 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் தொடக்க விழாவின் போது அவ்வையாரின் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினார். டெல்லியில், கல்வியின் மதிப்பைப் பற்றிப் பேச திருக்குறளை மேற்கோள் காட்டினார். ரூ. 74 கோடி செலவில், சென்னை தரமணியில் உள்ள செம்மொழி ஆய்வு நிறுவனத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். எப்படி மதுரை மண்ணிலே பாண்டித்துரை தேவர் ஐயா நான்காவது தமிழ்ச் சங்கத்தின் புகழ் நிலைத்திருக்கிறதோ, அதே போல, ஐந்தாவது தமிழ்சங்கம் என்றால் நமது பாரதப் பிரதமர் நரேந்திரமோடி பெயர்தான் நினைவுக்கு வரும்.

ஆனால், தமிழக திமுக அமைச்சர் ஒருவர், அரசுப் பள்ளி விழா ஒன்றில், மாணவர்கள் மத்தியில், வாழ்த்துக்கள் என்று எழுதுவதற்குப் பதிலாக, வாழ்துகள் என்று எழுதுகிறார். 2022 ஆம் ஆண்டில் நடந்த பத்தாம் வகுப்பு தமிழ் மொழித் தேர்வில், 55,000 குழந்தைகள் தேர்ச்சி பெறவில்லை. இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும், தாய்மொழியை மறந்ததில்லை. தமிழ்நாட்டில் தமிழைக் கொன்று கொண்டிருக்கிறார்கள்.

70 ஆண்டு காலமாக மேடை போட்டு தமிழ்மொழியை வைத்து வியாபாரம் செய்து அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்ற கழகம் தமிழ் மொழியை வளர்த்த லட்சணம் இதுதான்.

1300 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை வந்து குடியேறிய சௌராஷ்டிரா மக்கள், தமிழகத்தால், தமிழ் மக்களால் அரவணைக்கப்பட்டு, இன்று மதுரையின் அடையாளமாக மாறிவிட்ட சௌராஷ்டிரா பெருமக்களையும் அவர்கள் பூர்வீகத்தையும் இணைக்கும்படி, சௌராஷ்ட்ரா தமிழ்ச் சங்கம் கொண்டாடப்பட்டது.

இந்தியாவை ஒருங்கிணைப்பதற்காக நமது பிரதமர் தமிழ்ச் சங்கங்கள் மூலமாகச் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம், இந்தியாவைப் பிரித்துக் கொண்டிருக்கிறது. வடக்கு, தெற்கு என்ற பிரிவினையை ஏற்படுத்திக் குளிர்காய்கிறார்கள் என அண்ணாமலை தெரிவித்தார்.

Tags: parliment electionPM ModiMaduraiTamiltamilnaduannamalai en maan en makkalDMK Minister
ShareTweetSendShare
Previous Post

ஆர்.எஸ்.எஸ். தமிழக தலைவர்கள் தேர்வு!

Next Post

ஒரு ஆட்சி எப்படி நடைபெற கூடாது என்பதற்கு திமுக ஆட்சி உதாரணம் : அண்ணாமலை

Related News

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies