அயோத்தி ராமர் கோயிலுக்குக் கடந்த ஒரு மாதத்தில் சுமார் ரூ.25 கோடி நன்கொடை கிடைத்துள்ளதாக, ராமர் கோயில் அறக்கட்டளையின் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா கடந்த ஜனவரி மாதம் 22 -ம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து ஜனவரி 23ஆம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ரூ.25 கோடி நன்கொடை கிடைத்துள்ளதாக ராமர் கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
.மேலும், ஜனவரி 23 -ம் தேதி முதல் மொத்தம் 60 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகவும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ரூ.25 கோடி நன்கொடையாகவும் மற்றும் 25 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் கிடைத்துள்ளதாக ராமர் கோயில் அறக்கட்டளை பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா தெரிவித்துள்ளார்.