இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா நடுவரிடம் ஆவேசமாக பேசியதற்காக, அடுத்து வரும் 2 போட்டிகளில் விளையாட தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவந்தது.
இதில் அனைத்து கடைசி டி20 போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டியிலும் இலங்கை அணியே வெற்றிபெற்றது. இந்த தொடரில் போது ஒரு போட்டியில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா நடுவரிடம் ஆவேசமாக பேசியதற்காக அவரை அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
தம்புல்லாவில் நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், தான் வீசிய பந்துக்கு NO BALL கொடுத்ததற்கு கள நடுவர் லிண்டன் ஹனிபல்லிடம் ஆவேசமாக பேசியதற்காக வனிந்து ஹசரங்காவிற்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், வங்கதேசத்திற்கு எதிரான அடுத்த டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து ஹசரங்கா இடைநீக்கம் செய்யப்படுவார். ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என இலங்கை கைப்பற்றியது. இதில் ஹசரங்கா தொடர் நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.