இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 353 ரன்களை எடுத்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 307 ரன்களை எடுத்தது.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து 145 ரன்களை எடுத்தது. இறுதியாக இங்கிலாந்து அணி 191 ரன்கள் முன்னிலையில் இருந்தது. பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா பௌண்டரீஸ் என மொத்தமாக 24 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
அதேபோல் ஜெய்ஸ்வால் 16 ரன்களை எடுத்து களத்தில் உள்ளார். தற்போது இந்திய அணி 40 ரன்களை எடுத்துள்ளது. இன்னும் 152 ரன்கள் எடுத்தால் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும்.