அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 553 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த ரயில் நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட நவீன முகப்பு, குழந்தைகள் விளையாடும் பகுதி, விற்பனை நிலையங்கள், உணவு மையங்கள் போன்ற நவீன பயணிகள் வசதிகளை கொண்டிருக்கும். அவை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்ததாகவும் மாற்றியமைக்கப்படும். இந்த நிலைய கட்டடங்களின் வடிவமைப்பு உள்ளூர் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றை பிரதிபலிப்பதாக இருக்கும்.
மேலும், சுமார் 385 கோடி ரூபாய் செலவில் மறுமேம்பாடு செய்யப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலம் கோமதி நகர் ரயில் நிலையத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார். முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்த நிலையத்தில் ஏர் கான்கோர்ஸ், நெரிசல் இல்லாத சுழற்சி, உணவகங்கள் மற்றும் மேல் மற்றும் கீழ் அடித்தளத்தில் போதுமான வாகன நிறுத்துமிடம் போன்ற நவீன பயணிகள் வசதிகள் உள்ளன.
1,500 சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பார். 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.21,520 கோடியாகும். இந்தத் திட்டங்கள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும், பாதுகாப்பு மற்றும் இணைப்பை மேம்படுத்தும், ரயில் பயணத்தின் திறனை மேம்படுத்தும்.