முத்துராமலிங்க தேவர் வடிவில் பிரதமர் மோடி!- அண்ணாமலை பேச்சு
Mar 15, 2026, 06:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முத்துராமலிங்க தேவர் வடிவில் பிரதமர் மோடி!- அண்ணாமலை பேச்சு

Murugesan M by Murugesan M
Feb 26, 2024, 11:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முத்துராமலிங்கத் தேவர் வடிவில் பிரதமர் நரேந்திர மோடி செயலாற்றி வருகிறார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

‘என் மண், என் மக்கள்’ யாத்திரையை கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நடத்தி வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் யாத்திரை நாளை நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், மதுரை மேற்கு தொகுதியில் நேற்று நடைபயணத்தில் பங்கேற்றார் அண்ணாமலை. அதைத்தொடர்ந்து, மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற தென்னிந்திய பார்வர்டு பிளாக் தேச ஒற்றுமை தென்மண்டல மாநாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,

குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து இந்தியாவில் முதலில் குரல் கொடுத்தவர் நமது தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்கள். இளைஞர்களின் உந்து சக்தியாக, தேசத்திற்காக எழுச்சி மிகுந்த உரை ஆற்றுவதில் வல்லவரான தேவர் ஐயா அவர்களுக்கு, ஆங்கிலேய அரசு வாய்ப்பூட்டு சட்டம் போட்டது.

அதன் பிறகு வந்த தேர்தலில், மேடைகளில் பேசாமலேயே, ராமநாதபுரம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பெருமைக்குச் சொந்தக்காரர். சுதந்திர இந்தியாவின் முதல் இரண்டு தேர்தல்களிலும், ஒரே நேரத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெறும் அளவுக்கு, மக்களின் பேரன்பைப் பெற்றிருந்த தலைவர்.

ஜஸ்டிஸ் கட்சி, காங்கிரஸ் கட்சி, திமுக ஆகிய மூன்று கட்சிகளுக்குமே சிம்ம சொப்பனமாக விளங்கிய ஒரே தலைவர் நமது தெய்வத்திருமகனார் தேவர் ஐயா அவர்கள். இன்றைய ஜாதி அரசியல், குடும்ப அரசியல், ஊழல் அரசியல், அடாவடித்தனமான அரசியல் இந்த நான்கையும் அழிக்க, நமக்கு தெய்வத்திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் ஐயா மீண்டும் தேவைப்படுகிறார்.

அவரது ஆசீர்வாதத்தால், நாம் திராவிடக் கட்சிகளின் இந்த ஜனநாயக விரோத அரசியலை நிச்சயம் ஒழிப்போம். பாராளுமன்றத்தில் தெய்வத்திருமகனார் தேவர் ஐயா சிலை, நமது முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் வாஜ்பாய் அவர்கள் ஆட்சியில், அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களால் 2002 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், தெய்வத்திருமகனார் தேவர் ஐயா மீது மிகுந்த பற்று கொண்டவர்.

வரும் பாராளுமன்றத் தேர்தல், தெய்வத்திருமகனார் தேவர் ஐயா அவர்கள் காட்டிய தேசியமும் தெய்வீகமும் சார்ந்த அரசியலை முன்னெடுத்துச் செல்லும், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கவிருக்கும் தேர்தல். தெய்வத்திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்கள் ஆசிகளுடன், தமிழகமும் இம்முறை தேசியத்தின் பக்கம் நிற்கும் என்பது உறுதி எனத் தெரிவித்தார்.

Tags: bjpk annamalaiPM Modi
ShareTweetSendShare
Previous Post

ஞானவாபி வளாகத்தில் இந்துக்கள் வழிபட அனுமதி – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Next Post

தமிழகத்தில் அரசியல் மாற்றம்! – அண்ணாமலை உறுதி

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies