பல்லடத்தில், பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பல்லடத்தை அடுத்த மாதப்பூரில் நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதனையடுத்து அப்பகுதியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் மைதானத்தை சுற்றி, 5 கி.மீ. துாரம், போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டம் நடக்கும் மைதானம், ஏற்கனவே மத்திய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமரின் வருகைக்காக பிரத்யேக ‘ஹெலிபேடு’ மற்றும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், திருச்சி, கரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 4,550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உளளனர்.