சிக்கிம் மாநிலத்தின் முதல் ரயில் நிலையமான ரங்போ நிலையத்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
ரயில்வேயில் சுமாா் ரூ.41,000 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்புத் திட்டங்களை பாரத பிரதமா் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில், சிக்கிமின் முதல் ரயில் நிலையமான ரங்போ நிலையமும் அடங்கும்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, ” சிக்கிம் மாநிலத்தில் இதற்கு முன்பு ரயில் பாதை இல்லை. அரசாங்கம் மூன்று கட்டங்களாக இந்த திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளது. முதல் கட்டம், சிவோக் முதல் ரங்போ ரயில் திட்டம், இரண்டாவது கட்டமாக ராங்போவிலிருந்து காங்டாக் வரையும், மூன்றாவது கட்டமாக காங்டாக்கிலிருந்து நாதுலா வரையும் ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது.
சிக்கிம் மாநில மக்கள் இதுவரை சாலை மற்றும் விமான போக்குவரத்து மூலம் பயணித்து வருகின்றனர். சிக்கிம் மக்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.
இதுகுறித்து திட்ட இயக்குனர் மொஹிந்தர் சிங் கூறியதாவது, “இந்த திட்டத்தில் 14 சுரங்கங்கள், 13 பெரிய பாலங்கள் மற்றும் 9 சிறிய பாலங்கள் உள்ளன. சுரங்கப்பாதையை தோண்டுவது சவாலான வேலை. மேலும், பாறைகள் வலுவாக இல்லாததால் தோண்டுவது எளிதல்ல என்று கூறினார்.