போதைப்பொருள் கடத்தலில் திமுக நிர்வாகிக்கு உள்ள தொடர்புதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கிராமம் தோறும் கஞ்சா ஊடுருவியுள்ளது. தி.மு.க. நிர்வாகியே ரூ.3000 கோடி அளவிற்கு கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட என் மண் என் மக்கள் யாத்திரை” தி.மு.க. அரசின் ஊழல்களையும், இயலாமையையும் மக்களிடம் எடுத்துச் செல்லும் யாத்திரையாகவும், பிரதமரின் 10 ஆண்டுகளாக சாதனைகளையும் எடுத்துச்செல்லும் யாத்திரையாக அமைந்ததாக தெரிவித்தார்.
இந்த யாத்திரை பிப்ரவரி 27இல் பல்லடத்தில் நிறைவு பெற இருப்பதாகவும், இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கும் வகிக்கும் சில தலைவர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.