கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை அறிவித்ததால் இண்டி கூட்டணியில் குழப்பம் அதிகரித்துள்ளது.
இண்டி கூட்டணியை உருவாக்கிய ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார் அதில் இருந்து விலகி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தாவினார். பின்னர் பாஜக ஆதரவுடன் பீகார் முதலமைச்சராக பதவியேற்றார். இதனைத்தொடர்ந்து பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று அம்மாநில முதலமைச்சர் அறிவித்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்பியாக உள்ள கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் அன்னி ராஜா என்பவர் போட்டியிடுவார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இண்டி கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகிக்கும் நிலையில், கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர் எம்பியாக உள்ள தொகுதியில் அவரை ஆலோசனை செய்யாமல் வேட்பாளரை அறிவித்துள்ளது கூட்டணிக்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் இருந்து கேரளாவிற்கு ராகுல் காந்தி தொகுதி மாறினார். தற்போது அதற்கு சிக்கல் வந்துள்ளது