மருத்துவர்களை மக்கள் கடவுளாகக் கருதுகிறார்கள்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
Aug 22, 2025, 03:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருத்துவர்களை மக்கள் கடவுளாகக் கருதுகிறார்கள்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Web Desk by Web Desk
Feb 27, 2024, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மருத்துவர்களின் முதன்மை நோக்கம் பணம் சம்பாதிப்பதாக இருக்கக்கூடாது என்றும், சேவை என்பதாக இருக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு அறிவுறுத்தி உள்ளார்.

டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியின் 107-வது ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இன்று மருத்துவ அறிவியல் என்பது வெறும் சிகிச்சையோடு நின்றுவிடுவதில்லை. அதன் தன்மை மிகவும் விரிவடைந்துள்ளது. நான்காவது தொழிற்புரட்சி காரணமாக இயற்பியல், டிஜிட்டல் மற்றும் உயிரியல் துறைகளுக்கு இடையிலான இடைவெளி குறைந்து வருகிறது.

புதிய சோதனைகள் மற்றும் மரபணு நுட்பங்கள் பல நூற்றாண்டுகளாக நீடித்த சிக்கல்களுக்குத் தீர்வு காண உதவியாக உள்ளன. ஆனால், இந்தத் தொழில்நுட்பங்களை தவறாகப் பயன்படுத்தும் சூழலும் நிலவுகிறது. மருத்துவர்கள் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முயற்சிப்பார்கள்.

மக்கள் மருத்துவர்களை கடவுளாகக் கருதுகிறார்கள். இந்தத் தார்மீகப் பொறுப்பை மருத்துவர்கள் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். தொழில்முறைத் திறன் மற்றும் கருணை ஆகிய மதிப்புகளை ஒருங்கிணைந்த முறையில் கொண்டிருந்தால் மட்டுமே உண்மையிலேயே வெற்றிகரமான மருத்துவர்கள் அல்லது செவிலியர்களாக இருக்க முடியும்.

ஒரு நல்ல சுகாதார நிபுணராக இருக்க, ஒரு நல்ல மனிதராக இருப்பதும் முக்கியம் ஆகும். பண்பு இல்லாத அறிவும், மனிதநேயம் இல்லாத அறிவியலும் பாவகரமானது  என்று மகாத்மா  காந்தி கூறியதை குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, மருத்துவர்களின் முதன்மை நோக்கம் பணம் சம்பாதிப்பதாக இருக்கக்கூடாது என்றும் சேவை என்பதாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

நார்வே அரசுடன் இணைந்து தேசிய மனித பால் வங்கி மற்றும் பாலூட்டுதல் ஆலோசனை மையம் ஆகியவற்றை நிறுவியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தாய்ப்பால் கொடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்கவும் இந்த மையம் உதவியாக இருக்கும் என்றும் கூறினார்.

Tags: IndiaDroupadi MurmuPresidentMEDICAL COLLEG
ShareTweetSendShare
Previous Post

திமுகவின் போதைப்பொருள் கடத்தல் தொடர்பு! – அண்ணாமலை

Next Post

மக்கள் கோபத்தை திசை திருப்ப முயலும் ஸ்டாலின் : வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!!

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies